சுப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்மணி நுளம்புத்திரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரிவில் ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் மீது அச்சிடப்பட்டிருந்த விளக்கங்களை நீண்ட நேரம் வாசித்துக் கொண்டிருந்தார்.
பல்வேறு வர்த்தக அடையாளமுள்ள பக்கெற்றுகளை ஒவ்வொன்றாக அவர் மிகவும் கூர்மையாக வாசித்தமை அங்கு நின்ற ஏனைய வாடிக்கையாளர்கள் பலரினதும் கவனத்தை ஈர்த்தது.
இருவர் சுவாரஷ்யமாகப் பேசிக் கொண்டிருந்தது எனது காதில் விழுந்தது . "போயும் போயும் ஒரு நுளம்புத் திரியைப் பற்றிய விளக்கத்தை இவ்வளவு நேரம் வாசிக்கிறாரே" என்று ஒருவர் கூற மற்றைய நபர் அந்தப் பெண்ணின் வீட்டில் நுளம்புத் தொல்லை அதிகமாக இருக்க வேண்டும் . அதனால்தான் மிகச் சக்தியுள்ள நுளம்பு விரட்டியைத் தேடுகிறார்போலும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
குடும்பத் தலைவிக்குத்தானே வீட்டின் அவசர தேவை நன்கு புரியும்!