கொழும்பு தெற்கில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த ஒருவர், என்னிடம் ஓர் விளம்பர அறிவித்தலை நீட்டினார்.
அதைப் பெற்றுக்கொண்டு அவருடன் சிறிதுநேரம் உரையாடினேன். நீங்கள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரா? என்று நான் வினவியபோது
`இல்லை' என அவர் தலையை அசைத்தார். "விளம்பர அறிவித்தல்களை விநியோகிப்பதற்காக சம்பந்தப்பட்டவர்கள் கட்டுக்கட்டாக என்னிடம் கொண்டுவந்து தருகிறார்கள். வீதியெங்கும் அவற்றினை விநியோகிப்பதே எனது வேலை. இதற்காக பணம் தரப்படுகிறது" என்றார்.
"நான் வேறு எந்த தொழிலும் செய்யவில்லை,
விளம்பரங்களை விநியோகிப்பதே எனது முழுநேர வேலை" என்று அவர் கூறியதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
புதிய தொழில் ஒன்று உருவாகிவிட்டது!