Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
2020 ஆம் ஆண்டுக்குள் கூடுதல் அணுமின் நிலையங்களை நிறுவும் முயற்சியில் சீனா
[16 - February - 2008] [Font Size - A - A - A]
பெய்ஜிங் : சீனா எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் கூடுதல் அணுமின் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 11 அணு உலைகளை சீனா தற்போது இயக்கி வருகிறது. மின்சார தேவைகளுக்கு மூன்றாவது முக்கிய காரணியாக அணுமின் சக்தியை சீனா பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கிழக்கு சீனாவில் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய 3 அணு உலைகளை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

`அணுசக்தி திட்டங்கள் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் அனுபவம் வாய்ந்தது சீன அணுசக்தி துறை' என தேசிய வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஹென்வென்க் தெரிவித்தார். இவர் சீனாவில் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக கருதப்படுபவர்.

சீனாவில் மொத்த மின்சார உற்பத்தியில் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் 2 சதவீதமே பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் பார்க்கும் போது 16 முதல் 17 சதவீதம் வரை அணு உலைகளிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை சீனா பயன்படுத்துகிறது.

பிரெஞ்ச் நிறுவனத்துடன் 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் அணு உலைகளை அமைக்க சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 2009 ஆம் ஆண்டுக்குள் 1,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

சீனாவில் அனைத்து அணுமின் திட்டங்களும் கடற்கரையோரப் பகுதிகளிலேயே நிறுவப்படுகின்றன. இனிமேல் அமையப்போகும் அணுமின் திட்டங்களையும் கடற்கரையோரப் பகுதிகளிலேயே அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆயுததாரியின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் பலி; 16 பேர் காயம்
சாட்டில் 15 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனம்
மலேஷியத் தேர்தல் மார்ச் 8 இல்
தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் அவுஸ்திரேலிய பிரதமர் கிழக்கு திமோர் விஜயம்
பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்
பாகிஸ்தான் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள்
சீனாவில் தீ விபத்து 11 பேர் பலி
2020 ஆம் ஆண்டுக்குள் கூடுதல் அணுமின் நிலையங்களை நிறுவும் முயற்சியில் சீனா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com