கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் பொது, பிரதான வைபவங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்வினையும் மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக ஒத்தி வைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் மாகாண கல்வி அமைச்சின் ஊடாக சகலவலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முன்னோடி நடவடிக்கையாகவே இவ்விசேட திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் பொது இடங்களில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சிவில் பாதுகாப்பு சேவைகள் பொலிஸார், பெற்றோர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ஆலோசனைகளைப் பெற்று குழுக்களை அமைத்து பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.