Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
[16 - February - 2008] [Font Size - A - A - A]
*அமைச்சர் நஜீப் ஏ.மஜீத்

யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூடிய கவனம் செலுத்தியிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;

"திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் காணப்படும் அத்தியாவசிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பிரதேச வீதி அபிவிருத்தியில் ஜனாதிபதியின் கமநெகும செயற்திட்டம் பாரிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளது. அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் கிராம மட்டங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அர சாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டங்கள் வெற்றியடைய பொதுமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

இறுக்கமான யுத்த சூழ்நிலையிலும் கூட மக்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை. எமது பிரதேசத்தின் வேலைத் திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், எமது பிரதேச மக்களின் வாழ்வு நிம்மதியடையும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போதுதான் எமது மக்களின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து சகல இனங்களுக்குமான சமத்துவ உரிமைகளை வழங்கும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து வெளிநாட்டுத் தூதகரங்களுடன் பேசியுள்ளேன். இதனால், இப்பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்ல முடியும். நாட்டில் புரையோடிப் போயுள்ள யுத்தம் இன்னும் சில காலங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும். அரசாங்கம் பயங்கரவாதிகளை தோற்கடித்து அவர்களிடமிருந்து கிழக்கை மீட்டது போன்று வடக்கையும் மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதில் அரசாங்கம் வெற்றிபெறுவது உறுதியாகும்" என்றார்.

மூதூர் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தேசநிர்மாண உட்கட்டமைப்பு அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரன்ஜித் டி சில்வா மற்றும் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com