முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் பா டசாலைகளின் கல்வி அதிகாரிகளின் கூட்டம் புதன்கிழமை கல்வியமைச்சில் நடைபெற்று ஆராயப்பட்டது.
வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும் பகுதிகளின் 76 கல்வி உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
முஸ்லிம்களின் கல்வி கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.
சகல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் முஸ்லிம் பாடசாலைகளை ஒரு வலயத்தில் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, முஸ்லிம் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான பிரிவுகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உட்பட ஆசிரிய பற்றாக்குறைகளை விசேட திட்டம் ஒன்றின் கீழ் நிவர்த்தி செய்ய வேண்டும்.
கல்விப்பணிமனைகளூடாக அனுப்பப்படும் பாடசாலைகளுக்கான வளங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிக்கும் போது மாவட்டங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் இக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
சமாதான கல்விப் பிரிவின் பணிப்பாளர் திருமதி அஜர்தான் மன்சூர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.