ஐந்து நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றில் வைத்து அங்கு பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவருக்கு பலவந்தமாக முத்தமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நாமல் பண்டார உத்தரவிட்டார்.
இப்பெண் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து பொலிஸார் இந்த வெளிநாட்டுப் பிரஜையை கைது செய்தனர்.
இது ஒரு தவறான முறைப்பாடு என்றும் தான் அவ்வாறு செயற்படவில்லை என்றும் சந்தேக நபர் தனது சட்டத்தரணி மூலம் தெரிவித்தார்.
ஆனால், அப்பெண்ணின் சட்டத்தரணி இச்சம்பவம் உண்மையானது என்றும் பொய்யான முறைப்பாடு இல்லை எனவும் வாதிட்டார். இதனையடுத்து, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் இச்சம்பவம் தொடர்பான பூரண விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.