ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகம் தேசிய அபிவிருத்தியை மையமாகக் கொண்டு எட்டுகற்கை நெறிகளுக்கு 2007/2008ம் கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்காகன விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தை www.uwu ac.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருப்பது அவசியமானது. விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களுடன் பல்கலைக்கழக வங்கிக்கணக்கு 3114820 இலக்கத்துக்கு 250 ரூபா செலுத்திய பற்றுச்சீட்டை இணைப்பது அவசியமாகும்.
கற்கை நெறிகளான, விஞ்ஞான தொழில் நுட்பம், முயற்சியாண்மையும் முகாமைத்துவமும், கணினி விஞ்ஞான தொழில்நுட்பம், ஏற்றுமதி விஞ்ஞானம், தொழில்துறை தகவல் தொழில்நுட்பம், விலங்கு விஞ்ஞானம், தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பெறுமதி கேந்திரம் கனிவளம் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.