யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் வெற்றிடமாகவுள்ள விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள் பதவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இப்பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நியமனக் கிளையில் பெற்று இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன் பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
வெற்றிடமாகவுள்ள உதவி விரிவுரையாளர், போதனாசிரியர் பதவிக்கு பாட அலகுகளாக, தமிழ், சமஸ்கிருதம், சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், ஆங்கில இலக்கியம் திட்டமிடல், மெய்யியல், உளவியல் மனைப்பொருளியல், சட்டம், மொழியியல், இந்து நாகரிகம், நாடகமும் அரங்கியலும், கிறிஸ்து நாகரிகம், பொருளியல், நுண்கலை வரலாறு, இந்து மெய்யியல், புராதன பொருட்கள் கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் மேற்குறிப்பிட்ட பாடங்களில், கல்வித்தகைமை உடையவர்களாயின் விண்ணப்பம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. உதவி விரிவுரையாளர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 25 ஆயிரத்து 145 ரூபாவும், போதனாசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 20 ஆயிரத்து 755 ரூபாவும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட படிகளும் வழங்கப்படும். இப்பதவிக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு பரீட்சை முடிவுகளை எதிர்பார்ப்போரும் விண்ணப்பம் செய்யமுடியும்.