கண்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறு நீரக நோயாளியொருவர் மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நாகம பொல்கஹவெல எனுமிடத்தைச் சேர்ந்த ஜோன் பெர்ணாண்டோ என்ற நோயாளியே தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், கடந்த 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்த வலி தாங்க முடியாத நோயாளி மனவிரக்தியடைந்த நிலையிலே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.