"நமக்காக நாம்" (அப்பி வெனுவென் அப்பி) வேலைத்திட்டத்தின் மூலமாக படையினருக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க கணிசமான அளவு தொழிலதிபர்கள் தன்னார்வத்துடன் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் அவரை சந்தித்து பேசிய போதே தொழிலதிபர்கள் தங்கள் பங்களிப்புகளை தெரிவித்திருக்கின்றனர்.
தொழிலதிபர்கள் இந்த பதிலில் திருப்தி தெரிவித்திருக்கும் ஜனாதிபதி வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள நேரமின்றி யுத்த களத்தில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் பணியாற்றி வரும் படையினருக்கு வீடுகளை அமைத்துக்கொள்ள உதவுவது எம் அனைவரினதும் கடமையென்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொழிலதிபர்களின் இந்த பங்களிப்பு குறித்து அவர்களுக்கு ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.