இலங்கை விமானப்படையினரின் முதலாவது பெண்கள் பரசூட் வீராங்கனைகளின் பயிற்சி நிறைவு நிகழ்வு கட்டுநாயக்க விமானப்படை முகாமில் நேற்று நடைபெற்றது.
விமானப்படைத் தளபதி றொஷான் குணத்திலகவின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் இவ்வீராங்கனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
17 விமானப்படை மற்றும் கடற்படையின் பரசூட் வீரர்களுடன் ஏழு பெண் பரசூட் வீராங்கனைகள் மிகவும் உயரத்திலிருந்து பரசூட் மூலம் வெற்றிகரமாக தரையை வந்தடைந்தனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பரசூட் பயிற்சியை இதுவரை 360 வீரர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.