Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
[16 - February - 2008] [Font Size - A - A - A]
*ஐந்து ஊடக அமைப்புகள் குற்றச்சாட்டு

-எம்.ஏ.எம்.நிலாம்-

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தங்குதடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இதுவிடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருக்கும் ஐந்து ஊடக அமைப்புகள் ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தத்தவறினால் மோசமான நிலை ஏற்படலாமெனவும் தெரிவித்துள்ளது.

சிரச (எம்.ரீ.வி./ எம்.பீ.ஸி.) ஊடக நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் சுசில் கிதெல்பிட்டியவை சந்தேகிக்கப்படக்கூடிய குழுவொன்று பின்தொடர்வதாக அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமெனவும் பாதுகாப்புத்தரப்பு இது விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டதாக தெரியவில்லை எனவும் ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், ஷ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு என்பன கூட்டாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசில் கிதெல்பிட்டிய கடந்த 14 ஆம் திகதி காலை 8 மணியளவில் தமது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு புறப்பட்ட சமயத்தில் இனந்தெரியாத இருவர் அவரது வீட்டருகில் நடமாடியதாகவும் அதன் பின்னர் அவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றதாகவும் அதேபோன்று இரவு 7.45 மணியளவில் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அதேநபர்கள் மீண்டும் அவரைப் பின்தொடர்ந்து வந்ததாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அண்மைக்காலமாக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல், தாக்குதல்கள் போன்ற பல நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். இவற்றை பார்க்கும் போது ஊடகவியலாளர்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.

ஊடகவியலாளர் மீது அடக்குமுறையை பிரயோகித்து ஊடக சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டுப்போட எடுக்கப்பட்டுவரும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளின் பின்னணில் அரசியல் சக்திகளும் செயற்படுவது பகிரங்க இரகசியமானதொன்றாகும். இவற்றை அரசு கண்டுகொள்ளாமலிருப்பது கவலையளிக்கின்றது.

சுசில் கிதெல்பிட்டியவின் முறைப்பாடு தொடர்பாகவும் ஊடகதுறைக்கு விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசும் பாதுகாப்புத்தரப்பும் காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம் எனவும் ஐந்து ஊடக அமைப்புகளும் குறிப்பிட்டிருக்கின்றன.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com