Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
குடும்பஸ்தரை காணவில்லை
[16 - February - 2008] [Font Size - A - A - A]
தெஹிவளையில் இரும்பு வியாபாரம் செய்யும் இளம் குடும்பஸ்தரொருவர் கடந்த வியாழக்கிமை முதல் காணாமல் போயுள்ளார்.

புளத்கோபிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தெஹிவளையில் தந்தையுடன் இரும்பு வியாபாரம் செய்து வந்தவருமான ஒரு பிள்ளையின் தந்தையான வெள்ளச்சாமி ஜெகன் (வயது 29) என்பவரே காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக தெஹிவளை, களுபோவில வீதியில், இரும்புக்கடையை தனது தந்தையுடன் நடத்தி வந்த இவர் சம்பவ தினம் புளத்கோபிட்டியிலிருந்து தெஹிவளைக்கு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டதாகவும் ஆனால், அவர் கடைக்கு வந்து சேரவில்லை என்றும் அவரிடம் சகல பதிவு ஆவணங்களும் அடையாள அட்டை என்பன இருப்பதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர் தொடர்பாக கொஸ்கம, மிரிகான, கோட்டை, கொகுவலை, புளத்கோபிட்டி பொலிஸாரிடம் விசாரித்த போதும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தொடர்பாக உயர் மட்ட பொலிஸாருடன் பிரதி அமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார்.

இதேவேளை, கதிரேசன் வீதி, வி.எஸ். லொட்ஜில் தங்கியிருந்தவர்களான வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வரதராசா பரமானந்தன் (வயது 24) மீசாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பதமரஞ்சன் (வயது23) ஆகியோர் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மோதரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மல்லிகாதேவி என்பவர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்ததோடு, இவர்களிருவரும் கடந்த 6 மாதங்களுக்கு மேல் கொழும்பில் தங்கியிருப்பதாகவும் வெளிநாடு செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இளைஞர்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குநர் நந்தன முனசிங்கவுக்கு பிரதி அமைச்சர் அறிவித்துள்ளதுடன் விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Email this page Your Opinion Print this page
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை பராமரிக்க 44 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா.
வடக்கில் எந்தவிதமான இராணுவ அழுத்தங்களும் எமக்கு இல்லை
அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
ஐ.நா. வதிவிட பிரதிநிதி குடாநாடு விஜயம்
குடும்பஸ்தரை காணவில்லை
பாணந்துறையில் ஆயுதபொதி மீட்பு
சிவில் பாதுகாப்பு குழுவுக்கு மாவட்டம் தோறும் 300 இளைஞர்களை இணைக்க நடவடிக்கை
ஸ்ரீபதியின் மரணத்தில் சந்தேகம் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலை தடுப்பதற்கு அரசு தவறிவிட்டது
முதலாவது பெண் பரசூட் படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள்
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்?
படையினருக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
80களின் பிற்பகுதியில் புலிகளுடன் ஜே.வி.பி.யினருக்கு ஆயுதத் தொடர்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பெரும் பரபரப்பு
உறுப்பினர்களின் வெளிநாட்டு பயண விவகாரம் தென் மாகாண சபைக்கூட்டம் ஒத்திவைப்பு
ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்து நோயாளியொருவர் மரணம்
ஆரம்பக்கல்வி முறையாக முன்னெடுக்கப்படாமையே தோட்டப் புறத்தில் கல்வி பின்னடைந்திருப்பதற்கு காரணம்
குடிமக்களெவரும் இல்லாது வெறிச்சோடிய நிலையில் திருகோணமலையின் 24 கிராம சேவகர் பிரிவுகள்
`விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதல்களால் தெற்கில் தமிழர்களை நாம் வெறுக்கக்கூடாது'
ஸ்பிறிங்வெலி தோட்டத்தில் தங்கியிருந்த பெண் வாள்வெட்டுக்கு பலி; இளைஞன் படுகாயம்
கலைப்பீட விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
ஊவா வெலிஸ்ஸ பல்கலைக்கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு ரயில் இணைப்பு பஸ்சேவையை அதிகரிக்க கோரிக்கை
வெளிநாட்டு பிரஜைக்கு விளக்கமறியல்
வடக்கு பதிவாளர் நாயக திணைக்களத்தால் காலங்கடந்த பதிவுகள் பணி நிறைவு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கல்வி அதிகாரிகளின் சந்திப்பில் ஆராய்வு
பாரபட்சமான நீர்க் கட்டண அறவீட்டுக்கு எதிராக றிஷாத் பதியுதீன் உடன் நடவடிக்கை
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் முறைசாராக் கல்வி பயிற்சி நெறிகள் ஆரம்பம்
இமாம் எம்.பி.யின் முயற்சியால் நிவாரணம் வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளுடன் 2 ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை
பாதுகாப்பு என்ற பெயரில் ஆசிரியர்களின் பொதிகளையும் சோதனையிட எதிர்ப்பு
மின்சாரம் தாக்கியதில் வர்த்தகர் உயிரிழப்பு
டெங்கு நோயினால் 45 தினங்களில் 3 பேர் உயிரிழப்பு; 36 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்டுள்ள திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி தீவிர அக்கறை
தண்ணீரை வீண்விரயமாக்காது செயற்பட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாது
கிழக்கு மாகாண பாடசாலைகளின் நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க உத்தரவு
சகல தொண்டர் நிறுவனங்களையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயற்படுமாறு அழைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com