யாழ். குடாநாட்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிடவும் யாழ். குடாநாட்டு நிலைமைகளைக் கண்டறியவும் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட பிரதிநிதி நில் பொனி யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ். கோவில் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சார்பு பிரதிநிதிகளை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை, யாழ். அரச அதிபர் கே.கணேஷை நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதியைச் சந்தித்து கலந்துரையாடியதோடு யாழ் மறை மாவட்ட ஆயர் சௌந்தரநாயகத்தையும் சந்தித்தார்.
காக்கைதீவில் மக்கள் குடியிருப்பு திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டதோடு மாலை. யாழ் மக்கள் பிரதிநிதிகளை அவர் சந்தித்தார்.