முல்லைத்தீவு நாயாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடற்புலிகளின், முன்னரங்க நடவடிக்கைத் தளம் மற்றும் பயிற்சி முகாம் மீதே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் நாயாறு பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தாக்குதல் விமானங்கள் ஆறுக்கும் மேற்பட்ட தடவைகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.