Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, February 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஷரபோவாவின் தந்தையால் புதிய சர்ச்சை ஜஸ்ரின் ஹெனின் முறைப்பாடு செய்தார்
[16 - February - 2008] [Font Size - A - A - A]
அவுஸ்திரேலிய ஓப்பன் டெனில் போட்டியின் போது, ஷரபோவாவின் தந்தை காட்டிய செய்கை குறித்து ஹெனின் புகார் தெரிவித்திருக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டி கடந்த மாதம் மெல்போனில் நடந்தது. இதில் ரஷ்ய அதிரடி புயல் ஷரபோவா `சாம்பியன்' கிண்ணத்தை வென்று அசத்தினார்.

முன்னதாக காலிறுதியில் அவர், `நம்பர் வன்' வீராங்கனை பெல்ஜியத்தின் ஜஸ்ரின் ஹெனினுடன் மோதினார். இதில் 4-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் ஹெனின் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இந்த ஆட்டத்தை ஷரபோவாவின் தந்தைத யூரி ஷரபோவும் நேரில் ரசித்தார். ஆட்டம் முடியும் தறுவாயில், அவர் தனது கழுத்தின் குறுக்கே கையை வைத்து அறுப்பது போன்று செய்கை காட்டினார்.

இந்தச் செய்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்தக் காட்சியை புகைப்பட கலைஞர்கள் `கிளிக்' செய்தனர். அந்த படம் பத்திரிகையிலும் வெளியானது.

ஷரபோவாவின் தந்தையின் செய்கையை கண்ட ஹெனின், அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருக்கிறார். இது குறித்து சர்வதேச பெண்கள் டெனிஸ் சங்க தலைமை நிர்வாகி லாரி ஸ்காட்டிடம் புகார் செய்திருக்கிறார். இதனை ஹெனின் தெரிவித்தார். இது குறித்து ஹெனின் மேலும் கூறுகையில்;

`அவரது செய்கையை பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது. இது பற்றி லாரி ஸ்காட்டிடம் உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் நானும் இதனைப் பார்த்தேன். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று கூறினார். இது போன்ற செய்கைகள் டெனிஸ் ஸ்ரேடியத்திற்குள் இருக்கக்கூடாது. இது பெண்கள் டெனிஸ் போட்டியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விடும். மேலும், பல பிரச்சினைகள் உள்ளே வரக் கதவைத் திறந்து விட்டு விடுவது போலாகி விடும்' என்றார்.

இந்தப்புகார் குறித்து கேள்விப்பட்ட ஷரபோவாவின் தந்தை யூரி ஷரபோவ் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. அந்தச் செய்கைக்கு `கட் செய்' என்ற அர்த்தம் கிடையாது. ஆட்டம் முடிந்துவிட்டது என்பதை குறிக்கும் வகையிலேயே நான் அவ்வாறு செய்கை காட்டினேன் என்று கூறியிருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
முக்கோணப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 63 ஓட்டங்களால் தோல்வி
ரொனால்டோ ஓய்வுபெறவேண்டிய நிலை கால் காயத்திற்கு உடனடியாக சத்திரசிகிச்சை
ஐ.பி.எல்.லில் ஆட இடையூறு ஏற்பட்டால் சிரேஷ்ட வீரர்களை இழக்க நேரிடும்
சொய்ப் அக்தருக்கு வாழ்நாள் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரிக்கை
ஷரபோவாவின் தந்தையால் புதிய சர்ச்சை ஜஸ்ரின் ஹெனின் முறைப்பாடு செய்தார்
இந்திய இளம் வீரர்கள் காயமடைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com