அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கோணத் தொடரில் இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 236 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் பெர்த் மைதானத்தில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆடிய அடம் கில்கிறிஸ்ட் மிகச் சிறப்பாக ஆடி 118 ஓட்டங்களையும் மைக்கல் கிளார்க்- 43, பொண்டிங்- 25, மைக்கல் ஹஸி- 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் லசித்த மலிங்க- 4, குலசேகரா- 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.3 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் குமார் சங்ககாரா 80 ஓட்டங்களையும் கப்புகெதர 26 ஓட்டங்களையும் ஜெயசூரியா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பிராக்கென், ஜோன்சன் தலா 3 விக்கெட்டுகளையும் ஹொக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக கில்கிறிஸ்ட் தெரிவு செய்யப்பட்டார்.