கொழும்பு வடக்கில் உத்தியோகம் பார்க்கும் ஓர் அன்பர், தபாலொன்றுடன் என்னைச் சந்தித்தார்.
""இது ஒரு திருமண அழைப்பிதழ். அமெரிக்காவிலுள்ள எனது உறவினருக்கு கட்டாயம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். நான் கடந்த 4 ஆம் திகதியன்று ஒரு தனியார் தபாலகத்தில் ஒப்படைத்தேன். முகவரியும் சரியாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், 14 ஆம் திகதி மீண்டும் எனது முகவரிக்கே வந்து சேர்ந்திருக்கிறது' என்றார் அந்த அன்பர்.
ஏன் திரும்பி வந்திருக்கிறது என்று கேட்டபோது, முகவரி பிழையாக எழுதப்பட்டிருக்கலாம் என்றனராம். ஆனால், அந்தத் தபால் இலங்கையைக் கடந்து சென்றதற்கான எந்த அறிகுறியும் அதாவது சீல் அதில் பொறிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தத் தனியார் தபாலகத்தில் எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கிடந்த பின் அதை எனது வீட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர் என்று வருத்தத்துடன் சொன்னார்.
தபால்களை மக்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் தபாலகங்களில் ஒப்படைக்கிறார்கள். இதை உணராமல் தபாலகங்களிலுள்ள ஊழியர்கள் எவரும் அசிரத்தையாகச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் அது குற்றமுமாகும்.
இதை அவர்கள் நன்குணர்ந்து நடந்து கொண்டால் சரி.