தள்ளு வண்டியில் வைத்து மரக்கறியை வீதி வீதியாக விற்பனை செய்து வந்த ஒருவர், அதைக் கைவிட்டு தேங்காய் விற்பதை அவதானித்தேன்.
மரக்கறிக்குப் பதிலாக இப்போது வண்டியில் தேங்காய் விற்கிறீர்களா? என்று கேட்டேன்.
"ஆமாம், தேங்காய் விற்பதில் அதிக இலாபம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் தேங்காய் விற்பனை, இலகுவான வேலை" என்றார்.
நான் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது, வேலைக்காரப் பெண்மணி கூறினார். "ஐயா! மேசை மீது 200 ரூபா வைத்துச் செல்லுங்கள். நான்கு தேங்காய்கள் வாங்க வேண்டும்."
தேங்காய்க்கு இவ்வளவு கிராக்கி ஏற்பட்டிருக்கிறதே. தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான்!