கொழும்பு தெற்கிலுள்ள வங்கியொன்றில் கணக்கை ஆரம்பிக்க ஒரு தமிழ் இளைஞர் சென்றார்.
அதிகாரி, இவரின் தேசிய அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு "உங்களின் விண்ணப்பத்தில் வேறு முகவரி இருக்கிறதே" என்றார்.
"ஆமாம், அடையாள அட்டையைப் பெறும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்தேன். இப்போது வேறு முகவரியில் வசிக்கிறேன்" என்று இளைஞர் பதிலளித்தார்.
"அப்படியென்றால் உங்கள் பெயரிலுள்ள தண்ணீர் பில், மின்சார பில் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்" என்று அதிகாரி சொன்னதும், "நீரும் உமது வங்கியும்" என்று முணுமுணுத்த வண்ணம் அந்த இளைஞர் அங்கிருந்து அகன்றார்.
நேராக இன்னொரு வங்கிக்கு சென்று இந்தக் கெடுபிடி இல்லாமல் கணக்கை திறந்து கொண்டாராம்.
மொத்தத்தில், யாருக்கு இழப்பு? சில அதிகாரிகள் தாங்களே தேவையில்லாமல் சட்டதிட்டங்களை புகுத்தி தங்கள் நிறுவன வளர்ச்சியையே கெடுத்துவிடுகிறார்கள்!