-ஜோன் ஷான-
(நேற்றைய தொடர்ச்சி)
ஆசியாவின் மற்ற பகுதியிலும் தளர்ச்சி
வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நட்புநாடான ஜப்பான் கொள்கை அளவில் அதை ஒப்புக் கொள்வதாக கூறியபோதிலும் கொசோவோவின் சுதந்திரத்தை உடனடியாக அங்கீகரிக்கவில்லை. ஜப்பானின் முக்கிய அரசாங்க செய்தி தொடர்பாளரான Nobutaka Machimura "சட்டபூர்வமாகவும், அரசியல் அளவிலும் கொசோவோ ஒரு அரசு என்ற தகுதிக்கு வருகிறதா என்பதை நாங்கள் ஆராயவேண்டும்; இந்த வழிவகை முடிய எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று நான் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார். ஜப்பானை பொறுத்தவரையிலும் அரசியலிலும் இதையொட்டிய கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் ஜப்பான் தொடர்பு கொள்ளுவது ரஷ்யாவிற்கு ஒரு ஆபத்து என்று மொஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானுக்கு தகவல் கொடுக்கும் வகையில் ஒரு ரஷ்ய மூலோபாய குண்டுவீசும் விமானம் இம்மாத தொடக்கத்தில் ஜப்பானின் வான்வழியில் பறந்தது; இதையொட்டி ஜப்பான் 22 ஜெட் இராணுவ விமானங்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது. கொசோவோவிற்கு டோக்கியோவின் அங்கீகாரம் என்பது ரஷ்ய-ஜப்பானிய உறவுகளை மேலும் பாதிப்பிற்கு உட்படுத்தும்; ஏனெனில் ரஷ்ய தூர கிழக்கு பகுதியில் இருக்கும் எண்ணெய், எரிவாயு அளிப்புக்களை பெறுவதற்கு ஜப்பான் முயன்று வருகிறது. இந்தியா கொசோவோ பிரச்சினையில் ஒருபுறத்தில் சேரவேண்டும் என்ற அழுத்தத்தை திசை திருப்ப முயன்றுள்ளது. இந்திய வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் Navtej Sarna "சில சட்டப் பிரச்சினைகள்" கொசோவோ அறிவிப்பில் உள்ளதாகவும் அரசாங்கம் "வளர்ந்து வரும் நிலைமையை ஆராய்வதாகவும்" கூறியுள்ளார். அனைத்து நாடுகளின் இறைமை, நிலப்பகுதி உரிமை ஆகியவை முற்றிலும் மற்ற நாடுகளால் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியா தொடர்ச்சியாகக் கொண்டுள்ள நிலைப்பாடு " என்றும் அவர் கூறினார். புதுடில்லி தனது சொந்தப் பிரிவினை இயக்கங்கள் பற்றிக் குறிப்பாக காஷ்மீரில் உள்ளவை கவலை கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் ஈரானைத் தளமாகக் கொண்டுள்ள Islamic Republic News Agency இடம்கூறினார். "சர்வதேச சமூகம் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் கொசோவோவில் செய்தது போல் கூடுதலான முறையில் காஷ்மீர் பிரச்சினை பற்றியதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தியாவில் நிலைப்பாடு அதன் மூலோபாய சங்கடத்தையும் பிரதிபலிக்கிறது. புஷ் நிர்வாகம் சீனாவிற்கு எதிராக இந்தியாவை செல்வாக்கிற்குக் கொண்டுவர முயன்றாலும் புதுடில்லி பெயிங்கை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. குஇ? வில் "ஒரு பார்வையாளர் " என்ற முறையில் இந்தியா சேர்ந்துள்ளது. கொசோவோவிற்கு ஆதரவு என்று அறிவித்தால் இந்தியா அதன் நீண்ட நாள் நட்பு நாடு ரஷ்யாவுடன் கொண்டுள்ள உறவுகளுக்கு உறுதியாக சேதம் விளையும். இலங்கை இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சரகம் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கொசோவோ ஒரு தலைப்பட்சமாக சுதந்திரத்தை அறிவித்துள்ளது. சர்வதேச உறவுகளில் நிறுவப்பட்டுள்ள உலக இறைமை பெற்ற நாடுகளின் ஒழுங்கில் கட்டுப்பாடற்ற ஒரு முன்னோடியை ஏற்படுத்தக்கூடும். அதையொட்டி சர்வதேச சமாதானம் , பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தல் வரக்கூடும்". சிங்கள மக்கள் மற்றும் தமிழ் சிறுபான்மை ஆகியோரின் சமூக விளைவுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இலங்கையின் ஆளும் உயரடுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக ஒரு 25 ஆண்டுகால பேரழிவு தரும் உள்நாட்டுப் போரில் மூழ்கியுள்ளது. கொசோவோவின் சுதந்திரம் சுதந்திர தமிழ் அரசுக்கான புலிகளின் அழைப்பிற்கு ஆக்கம் கொடுக்கக்கூடும் என்று கொழும்பு அஞ்சுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் சில அமெரிக்க நட்பு நாடுகளும் கொசோவோவிற்கு ஆதரவு கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்கின்றன. 18,000 தீவுகள் மற்றும் நூற்றுக்கணக்கான இனவழிப் பிரிவுகள் இருக்கும் பரந்த நாடான இந்தோனேசியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது; "இந்தோனேசிய அரசாங்கம் கொசோவோவில் நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கும். ஆனால், ஒரு தலைப்பட்ச சுதந்திரத்தை அங்கீகரிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கும் நிலையில் இல்லை. `Aceh மேற்குபப்புவா , மாலுகு தீவுகளில் கொசோவோ பிரிவினை போக்குகளை தூண்டக்கூடும் என்று ஜகார்த்தா அஞ்சுகிறது. அப்பகுதியில் தங்கள் செல்வாக்கை பெருக்க வேண்டும் என்ற அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் சூழ்ச்சித் திட்டங்களின் விளைவாக 1999 இல் கிழக்கு இந்தோனேசியாவில் இருந்து முறித்துக் கொண்டு சென்றது. பிலிப்பைன்ஸின் வெளியுறவு மந்திரி ஆல்பேர்ட்டோ ரோமுலோ அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் . ஒரு சுதந்திர கொசோவோவை மணிலா எதிர்க்கவில்லை என்றாலும், "சர்வதேச மற்றும் நிலப்பகுதி இறைமைக் கோட்பாடுகள் சர்வதேச அளவில் ஏற்கப்பட்டவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும்" என்று அது கூறியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிலிப்பினோ அரசாங்கம் தெற்கு மிண்டநோ பகுதியில் இருக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வருகிறது; இப்பொழுது அது முஸ்லிம் சிறுபான்மையினருக்கு "தன்னாட்சி" கூடுதலாகக் கொடுப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடக்கியுள்ளது. கிழக்கு திமோரில் "சுதந்திரத்தை" ஏற்படுத்திய அவுஸ்திரேலியா கொசோவோ சுதந்திரத்தை ஆர்வத்துடன் அங்கீகரித்துள்ளது. "கொசோவோ அரசாங்கம் வரவிருக்கும் பணிகளை நன்கு செய்யும் என்று அவுஸ்திரேலியா வாழ்த்துகிறது" என்று வெளியுறவு மந்திரி ஸ்டீபன் ஸ்மித் கூறினார். 1999 இல் கிழக்கு திமோரில் அவுஸ்திரேலிய தலையீடு. கொசோவோவில் நேட்டோ சக்திகள் "நன்னெறி சார்ந்த ஏகாதிபத்திய" அடிப்படையில் தலையீடு என்ற கூற்றுக்களைத்தான் எதிரொலிக்கிறது. சேர்பிய சக்திகளால் கொசோவோ அல்பேனியர்கள் கொல்லப்படுவதை தடுக்க அமெரிக்கா சேர்பியாவின் மீது குண்டுவீச்சு நடத்துவது முக்கியம் என்று அமெரிக்கா கூறியது. முன்னாள் ஹோவர்ட் அரசாங்கம் இந்தோனேசிய போராளிகளால் படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருந்த கிழக்கு திமோர் மக்களுடைய காவலராக தன்னைக் காட்டிக் கொண்டது. ஒரு "சுதந்திரமான" கொசோவோ ஒன்றும் அவுஸ்திரேலிய துருப்புக்கள் உள்ளூர் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துள்ள கிழக்கு திமோரை விட அடக்குமுறையிலிருந்து சுதந்திரமாக இருக்கப்போவது கிடையாது. தன்னுடைய புவி-அரசியல் செல்வாக்கை தெற்கு பசிபிக்கில் வலுப்படுத்திக் கொள்ளவும் திமோர் கடலில் இருக்கும் எரிவாயு வளங்களை சூறையாடுவதற்கும் தான் அவுஸ்திரேலியா கிழக்கு திமோரில் தலையிட்டது. இப்பொழுதும் கூட திமோர் மக்கள் கடும் வறுமையிலும் நீடித்த வேலையின்மையிலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆழ்ந்திருப்பது போல்தான் கொசோவோவுடைய மக்களும் அதிக வேறுபாடு இல்லாமல் இருப்பர்; சொல்லப்போனால் அமெரிக்க ஐரோப்பிய சக்திகளின் மேலாதிக்கத்தின் கீழ் நிலைமை மோசமடையும்.
உலக சோஷலிச இணையத்தளத்திலிருந்து