Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
லண்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு
[01 - March - 2008] [Font Size - A - A - A]
பிரிட்டனில் 5.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒருவர் காயமடைந்ததுடன் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் பலரும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, வீடுகளை விட்டு தெருக்களுக்கு வந்தனர். லண்டனில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டு வடக்கு வேல்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிச்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.

இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வேல்ஸிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் குறித்து தகவல் அறிய 5,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பொலிஸ் நிலையத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிலர் தங்களது இரவு உடையுடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்து விவரம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகளை விரட்டுவோம்
உலகில் 35 சதவீதம் பேரை மலேரியா தாக்கும் அபாயம்
பெனாசிர், சர்தாரிக்கெதிராக தொடரப்பட்ட மனு பாகிஸ்தான் உயர்நீதிமன்றால் தள்ளுபடி
நேபாள அரசுக்கும் மாதேசிக் கட்சிக்கும் இடையிலான பேச்சுகள் தோல்வியில்
லண்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு
அமெரிக்காவின் உதவியுடன் சீனாவில் அதி நவீன அணு மின் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com