கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தற்கொலைக்குண்டுத்தாக்குதல் அங்கிகள், கிளைமோர்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுக் காலை முகத்துவாரம் அளுத்மாவத்தை பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடைபெற்ற சில நிமிடநேரத்திலேயே முகத்துவாரத்தில் வெறும் வளவொன்றினுள்ளிலிருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஜக்கற்ருகள் - 3, கிளைமோர் குண்டுகள் -6, கைக்குண்டுகள் - 4 மற்றும் சீ-4 ரக வெடிமருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பகுதியில் தீவிர தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.