ஷெல் காஸ் (சமையல் எரிவாயு) சிலின்டரொன்றின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 261 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரொன்றின் விலையே மேற்குறித்த தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஷெல் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை 1,488 ரூபாவாக இருந்த சிலின்டரொன்றின் விலை 1,749 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஷெல் காஸ் நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளரான ரிமோயி சல்டீன் தெரிவித்தார்.
இதேநேரம், ஷெல் காஸின் விலை இதற்கு முன்னர் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 175 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் 17.5 சதவீதத்தால் ஷெல் காஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு நுகவோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி கிடைத்து விட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த விலை அதிகரிப்பின் பிரகாரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரொன்றின் புதிய விலை 322 ரூபா என்றும் ஷெல் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.