Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இந்தாண்டு பிரெஞ் கிண்ணத்தை கைப்பற்றுவேன் உலகின் முதல்தர வீரர் பெடரர் நம்பிக்கை
[01 - March - 2008] [Font Size - A - A - A]
இந்தாண்டு பிரேஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வெல்வேன் என `நம்பர் 1` வீரரான சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் ரெஜர் பெடரர் டெனிஸ் உலகின் `நம்பர்-1' வீரராக திகழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பன், யு.எஸ். ஓப்பன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்று சாதித்த போதிலும் பிரெஞ் ஓப்பனை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலிடம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறார்.

இம்முறையும் பிரெஞ் ஒப்பன் தொடரில் நடாலிடம் பெடரர் தாக்குப்பிடிக்க இயலாது என பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக பெடரர் அளித்த பேட்டியில்,

அவுஸ்திரேலியன் ஓப்பனில் தோல்வியடைந்தது வருந்தமளிக்கிறது. அடுத்து வரும் தொடர்களில் வெற்றியை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன், பிரெஞ் ஓப்பனை கைப்பற்றுவது தான் லட்சியம். இது என்னுடைய கடைசி வாய்ப்பு என பலரும் பல விதமான கருத்துக்களை சொல்கிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் டெனிஸ் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட சிறந்த வீரரால் வெற்றி வாகை சூட முடியும். வெற்றிக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்.

அதிர்ஷ்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. களிமண் ஆடுகளங்களில் ஆரம்பம் முதல் ஆடி வருகிறேன். பிரெஞ் ஓப்பனில் இரண்டு முறை வெற்றி வாய்ப்புகள் இரு செட்களில் கைநழுவிப்போனது. இதில் என்னால் சாதிக்க முடியாதென்று சொல்வது அபத்தமானதென்றும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஹர்பஜன் பற்றி ஹைடன் கூறியதில் தவறில்லை வெளிப்படையாக பேசியதே முட்டாள் தனம்
தோனி, கில்கிறிஸ்ரின் கையுறைகள் புதிய சர்ச்சை
வர்த்தக ரீதியில் பணம் கொழிப்பது கிரிக்கெட் இதிலிருந்து இலாபம் சம்பாதிக்க விரும்புகிறோம்
சச்சின், கங்குலி, பொண்டிங், பிரட்லீ 5 சதத்திலிருந்து 99 சதம்வரை ஏலம்
இந்தாண்டு பிரெஞ் கிண்ணத்தை கைப்பற்றுவேன் உலகின் முதல்தர வீரர் பெடரர் நம்பிக்கை
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூலையில் பாகிஸ்தானில் நடைபெறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com