* கோவில்பட்டியில் நூதன போராட்டம்
இந்திய கிரிக்கெட் சபையை கண்டித்து கோவில்பட்டியில் முன்னணி கிரிக்கெட் வீரர்களை ஏலமிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தியாவில் 20-20 கிரிக்கெட் போட்டி நடத்துவதற்காக இந்திய, சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அதிக தொகைக்கு ஏலமெடுத்து தனித்தனி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் சபையின் இந்தச் செயலைக் கண்டித்து கோவில்பட்டியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வீரர்களை ஏலமெடுத்து நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை கேலிக்கூத்தாக்கிய இந்திய கிரிக்கெட் சபையை கண்டித்தும் கிரிக்கெட்டிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கங்குலி, பொண்டிங், பிரட் லீ உள்ளிட்ட பல சர்வதேச முன்னணி வீரர்களின் பெயர்கள் அடங்கிய அட்டையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர். அதில் வீரர்கள் ஐந்து சதத்திலிருந்து அதிக பட்சமாக 99 சதம் வரை ஏலம் எடுக்கப்பட்டதாக கேலி செய்திருந்தனர்.