Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஹர்பஜன் பற்றி ஹைடன் கூறியதில் தவறில்லை வெளிப்படையாக பேசியதே முட்டாள் தனம்
[01 - March - 2008] [Font Size - A - A - A]
* அவுஸ்திரேலிய பத்திரிகைகள் கூறுகின்றன

ஹர்பஜன் பற்றி ஹைடன் கருத்தில் தவறில்லை. ஆனால் வெளிப்படையாகப் பேசியதே முட்டாள் தனமானது என பெரும்பாலான அவுஸ்திரேலிய பத்திரிகைகள் கூறியுள்ளன.

வானொலிப் பேட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஹைடன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனை `எதற்கும் உபயோகமற்ற களை' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்திய தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தையடுத்து ஹைடனுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்தது அவுஸ்திரேலிய (சி.ஏ.,) இதற்கென அபராதம் எதுவும் விதிக்கப்படாமல் வெறும் எச்சரிக்கையோடு விடப்பட்ட ஹைடன் பற்றி அவுஸ்திரேலியாவின் பிரபல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பாலான பத்திரிகைகள் ஹைடனை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி செய்திகள் வருமாறு;

அவுஸ்திரேலியர்கள் அனைவரும் ஹர்பஜன் பற்றி நினைக்கும் கருத்தை வெளியிட்டதற்காக ஹைடன் எச்சரிக்கப்பட்டுள்ளார். உபயோகமற்ற களை என்பதில் இனவெறிக்கு இடமில்லை. நாகரிகமற்ற கருத்துமில்லை. மோசமானதுமில்லை. `தி அவுஸ்திரேலியன்' அவுஸ்திரேலிய அணியினர் பலர் ஹர்பஜன் மீது கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை ஹைடன் வெளிப்படையாக கூறியதுதான் முட்டாள்தனமானது. வானொலி பேட்டி தவறான எண்ணத்துடன் வழங்கப்படவில்லை. தந்திரம் தெரியாத ஹைடன் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டார். குற்றம் சுமத்த இந்தியர்களுக்கு ஒரு விடயம் கிடைத்துள்ளது.

`ஹெரால்ட்சன்': இந்த சமீபத்திய சூறாவளியில் ஹர்பஜன் சிக்கியிருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. இவரது மோசமான நடத்தை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் மிகப்பிரசித்தம். இதைப்பற்றி ஹர்பஜன் கவலைப்படுவதும் இல்லை. ஹைடன் தேவதை போல் தன்னை சித்தரித்துக் கொள்ளக்கூடாது. மைதானத்தில் வசைபாடுவதால் கெட்ட பெயர் எடுத்துவருகிறார். யார் சொல்வதை நம்புவது என்பது தெளிவாக இல்லை. ஹர்பஜன் ஏதாவது வேடிக்கை காட்டிக் கொண்டேயிருக்கிறார். இந்திய அணியின் போக்குக்கு அவுஸ்திரேலியா பழகவில்லை. விளையாட்டில் ஆக்ரோஷம் வெளிப்படட்டும். பொண்டிங் சிறந்த தலைமையை மெய்ப்பிக்க வேண்டும்.

`தி ஏஜ்' : முதல் இறுதியாட்டத்தை சந்திக்கும் தருணத்தில் கவலை தரும் கட்சி அரங்கேறியுள்ளது. சுற்றுப்பயண வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்தத் தொடரில் அதிகளவில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளதாகவும் பத்திரிகைகள் கூறியுள்ளன.

Email this page Your Opinion Print this page
ஹர்பஜன் பற்றி ஹைடன் கூறியதில் தவறில்லை வெளிப்படையாக பேசியதே முட்டாள் தனம்
தோனி, கில்கிறிஸ்ரின் கையுறைகள் புதிய சர்ச்சை
வர்த்தக ரீதியில் பணம் கொழிப்பது கிரிக்கெட் இதிலிருந்து இலாபம் சம்பாதிக்க விரும்புகிறோம்
சச்சின், கங்குலி, பொண்டிங், பிரட்லீ 5 சதத்திலிருந்து 99 சதம்வரை ஏலம்
இந்தாண்டு பிரெஞ் கிண்ணத்தை கைப்பற்றுவேன் உலகின் முதல்தர வீரர் பெடரர் நம்பிக்கை
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூலையில் பாகிஸ்தானில் நடைபெறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com