வடபகுதியைச் சேர்ந்த ஓரிடத்தில் ஒருவர் தனது மகளின் திருமணத்தைத் தடல்புடலாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள தனது உறவினர்களை அழைக்கவும் திட்டமிட்டிருந்தார்.
இந்த ஏற்பாடுகளில் இவர் மும்முரமாக இறங்கியபோது இவரது நெருங்கிய சகாக்கள் அபாய அறிவிப்புக் கொடுத்தார்கள். "ஆடம்பரமாகத் திருமண வைபவத்தை நடத்தினால், கப்பம் பெறுவோர் உம்மை நாடி வந்து இலட்சக் கணக்கில் கேட்டுவிடுவார்கள். அப்போது என்ன செய்யப்போகிறீர்?" என்றார்கள்.
இவர் நன்கு யோசித்துவிட்டு, திருமண வைபவத்தை இங்கு நடத்தும் திட்டத்தையே கைவிட்டுவிட்டார். மிக நெருங்கிய உறவினர் குழுவை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு சென்று அங்கு அடக்கமான முறையில் நிகழ்வை நடத்தத் தீர்மானித்திரு க்கிறாராம்.
இன்றுள்ள நிலைவரத்தைப் பார்த்தீர்களா!