Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
[10 - March - 2008] [Font Size - A - A - A]
-அன்புமணி-

சித்தமருத்துவத்துறை தமிழ்மக்களின் பாரம்பரிய பொக்கிஷம் ஆகும். பக்கவிளைவுகள் இல்லாமல் சகல விதமான வியாதிகளையும் குணப்படுத்துவதற்கு சித்த வைத்தியத்தில் மருந்து வகைகள் உள்ளன. ஆனாலும், இக்காலத்தில் எவரும் இம் மருத்துவத்தை நாடுவதில்லை. அதனால் இம் மருத்துவத்துறை படிப்படியாக அருகி இன்று மறைந்து விடும் நிலையில் உள்ளது.

ஆனால், சிங்களவர் மத்தியில் ஆயுர்வேத வைத்தியத்துறை மக்களின் அக்கறையினாலும் அரசாங்க ஆதரவினாலும் இன்று பெருமளவில் முன்னேறியுள்ளது. "ஹெட்டிகொட குரூப்" நிறுவனத்தின் மூலம் இம்மருந்துகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

வெதமாத்தயா என்று அழைக்கப்படும் சிங்கள ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகின்றனர். அதேபோன்று தமிழ் மக்களிடையே சித்த மருத்துவர்கள் முக்கியத்துவம் பெற வேண்டுமானால் பல்கலைக்கழகத்தில் இம்மருத்துவத்துறை ஒரு கற்கை நெறியாக இடம்பெறவேண்டியது அவசியம் என மட்டக்களப்பு சித்த வைத்தியர்களால் வற்புறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ க.தங்கேஸ்வரி மூலம் இவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கும், உயர்கல்வி அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பல விரிவான அறிக்கைகளை அனுப்பியிருந்தார்.

1995/1996 முதல் 2006/2007 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கை நெறிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒரு அட்டவணையாக இக்கடிதங்களில் சேர்க்கப்பட்டிருந்தது (இணைப்பு)

இவ்விடயம் தொடர்பாக 11.5.2005 முதல் 15.8.2007 வரை தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் இதன் முன்மொழிவுக் கடிதத்தை 11.5.2006 இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தார்.

ஆனால், நீண்டநாள் அதுகிடப்பில் கிடந்தது பின்னர் கற்கை நெறியின் உள்ளடக்கம் ( Course structure) மற்றும் பாடத்திட்டம் முதலியன 30.10.2005 இல் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

இதன் செயற்திட்ட அறிக்கை திருகோணமலை வளாகத் தலைவரால் தயாரிக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அங்கீகரிக்கப்பட்டு 7.4.2006 இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவை பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரியும் அவரது குழுவினரும் நேரில் சந்தித்து நீண்டநேரம் இவ்விடயம் பற்றி விவாதித்தனர்.

அதன் பின் அமைச்சர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்காவுக்கு 17.6.2007 இல் அறிவித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதன்படி இவ்விடயம் நிலையியல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இக்கற்கைநெறி `சித்தமருத்துவ கற்கைநெறி' என்பதற்குப் பதிலாக `பாரம்பரிய வைத்தியக் கற்கைநெறி' ( Traditional medicine) என மாற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 738 ஆவது கூட்டத்தில் (19.7.2007) பின்வருமாறு இவ் வைத்தியத்துறையை நடத்தலாம் எனத் தீர்மானித்தது.

1. சித்தவைத்தியமாணி ( Bachelor siddha medicine)

2. ரணசிகிச்சை பட்டதாரி (Surgery Degree)

இக்கற்கை நெறியை 2008 ஆம் வருடம் முதல் திருகோணமலை வளாகத்தில் ஆரம்பிக்கலாம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு 15.8.2007 திகதிக் கடித மூலம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக க.தங்கேஸ்வரி பா.உ. 21.08.2007 பாராளுமன்றத்தில் விரிவான உரை ஆற்றியுள்ளார்.

இக்கற்கை நெறி பின்வருமாறு அமையவேண்டும் என முன் மொழியப்பட்டுள்ளது:

கற்கைநெறி- சித்த மருத்துவ சத்திரசிகிச்சை மாணி

(அ). சித்த வைத்தியமாணி

(ஆ). சத்திர சிகிச்சைமாணி

மதிப்பீட்டு முறைகள் (அ). எழுத்து, (ஆ).வாய்மொழி, (இ). செய்முறை, (ஈ). உள்ளக வைத்தியப் பயிற்சி.

அடுத்த 3 வருடங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவரின் உத்தேச எண்ணிக்கை (அ) முதல்வருடம்:30, (ஆ) இரண்டாம் வருடம் :40, (இ) மூன்றாம் வருடம் :40.

தேவையான ஆளணி- அ) விரிவுரையாளர் 2, ஆ) சிரேஷ்ட விரிவுரையாளர் 2, இ) போதனாசிரியர் 2, ஈ)கல்விசாரா ஊழியர் 10.

கற்கை வசதிகள்: அ)வகுப்பறைகள் உள்ளன, ஆ)ஆய்வு கூட வசதிகள்: இருக்கும் வசதிகள் போதுமானவை.

அடுத்த 3 வருடங்களுக்குத் தேவையான கற்கை வசதிகள் : இருக்கும் வசதிகள் போதுமானவை.

செனட் அங்கீகாரத் திகதி : 21.09.2005

கழக அங்கீகாரத் திகதி : 24.09.2005

நிதி ஒதுக்கீடு: ரூ.91.1 மில்லியன்

கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அமைச்சு அங்கீகாரம்

தெரிவிக்கப்பட்ட திகதி 15.08.2007

கடித இலக்கம் UGC/1UA/1/IIM/TC

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com