மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து ஒருவாரமாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் நீர் நிரம்பி வழிவதுடன் கூடாரங்களில் தங்கியுள்ள, இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
சிவராத்திரி தினம் தொடக்கம் பெருமழை விட்டு விட்டு பெய்து வருவதாலும் பருவமழையினால் வெள்ளம் ஏற்பட்டு வற்றிய பகுதிகளில் நீர் பெருமளவு தேங்கி நிற்பதாலும் நுளம்புகள் பெருகி தொற்றுநோய்களுக்கு மக்கள் ஆளாகும் அபாய நிலையும் காணப் படுகின்றது.
ஏற்கனவே காலநிலைமாற்றத்தால் இருமல், சளி தொல்லைகளுக்கு ஆளாகிவந்த மக்கள் டெங்குநோய், சிக்குன்குனியா நோய்களுக்கும் இலக்காக வேண்டிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.