கண்டியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிங்களவரெனவும், மற்றைய இருவரும் பதுளை கந்தகெட்டிய எனுமிடத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்றும் கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இம் மூவரும் ஆளடையாளத்தை உறுதி செய்து கொள்ள தவறியமையினாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் போதைப் பொருள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.