மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலும் மட்டக்களப்பு பஜார் பிரதான வீதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகள் நிறுத்த பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை வீதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிற்கும் முன்பாகவோ, அருகிலேயோ, வீதியிலேயோ எந்தவொரு வாகனமும் நிறுத்தப்படக் கூடாதென பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் வீதியெங்கும் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, கல்லடி, காத்தான்குடி, ஆரையம்பதி, தாளங்குடா, கிரான்குளம், குருக்கள் மடம், களுதாவளை, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சி மடம், பெரியகல்லாறு ஆகிய பிரதேசங்களில் இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்தத் தடைவிதிக்கப்பட்ட போதும் உள் வீதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.