நீர்கொழும்பு கடலில் வள்ளங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது இரு வள்ளங்கள் மோதியதால் ஒரு வள்ளத்தில் இருந்து காணாமல்போன வர்ணகுலசூரிய என்ற மீனவரின் சடலம் இரண்டு நாட்களின் பின்னர் கரையொதுங்கியது.
நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 5 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரு வள்ளங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
சம்பவதினம் தமது வள்ளமும், வேறு ஒரு மீன்பிடி வள்ளமும் நேருக்கு நேர் மோதியதாகவும், அதன்போது தனது தந்தை கடலுக்குள் விழுந்து காணாமல் போய்விட்டதாகவும் அவரின் மகன் மரண விசாரணையில் சாட்சியம் அளித்தபோது கூறினார்.
நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.