ருகுணுகுமாரி கடுகதி ரயிலில் மோதுண்டு இறந்தவரின் சடலம் ரயில் என்ஜினுடன் 2 மைல் தூரம் இழுத்து வரப்பட்ட சம்பவம் மாத்தறையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த ரயில் பம்புரண என்ற இடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இரவு நேரம் வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதுண்டு மரணமானார்.
இதன்போது இறந்தவரின் சடலம் ரயில் என்ஜினின் முன்புறமாகச் சிக்கியதுடன் மாத்தறை வரையும் கொண்டு வரப்பட்டது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய இவரின் மரண விசாரணையை மரணவிசாரணை அதிகாரி லலீத் டீ சில்வா நடத்தினார்.
ருகுணுகுமாரி கடுகதி ரயில் வேகமாக வந்ததால் சம்பவம் இடம்பெற்றபோது உடனடியாகவே அந்த இடத்தில் ரயில் என்ஜினை நிறுத்த முடியாமல் போனதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.