ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரி மாளிகையிலிருந்து ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில், அஜ்மீர் என்ற பொலிஸ் அதிகாரி அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
நிசாந்தன் என்ற, கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படுபவரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி ஜனாதிபதி பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர் மீது குற்றம் சாட்டி காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்தே இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.