Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
[10 - March - 2008] [Font Size - A - A - A]
தேசிய கல்வியியற் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகக் கிளை, வயம்ப பல்கலைக்கழகத்தின் வளாகம் போன்றவற்றை புத்தளத்தில் அமைத்து புத்தளம், ஆனமடுவ தேர்தல் தொகுதிகளின் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த இசுருபாயவில் நடைபெற்ற கூட்டத்தின்போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பணிப்புக்களை விடுத்துள்ளார்.

கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால ஆகியோரின் பணிப்பின் பேரில் கடந்த 05 ஆம் திகதி புத்தளம் கல்வி மேம்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டம் இசுருபாயவில் நடைபெற்றபோதே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய கல்வியியற் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகக் கிளை போன்றவற்றைப் புத்தளத்தில் அமைப்பதன் மூலம் கல்வியில் பின்தங்கியுள்ள புத்தளத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும் என தாம் நம்புவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த நிறுவனங்களை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு திறந்த பல்கலைக்கழக கிளையை புத்தளத்தில் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அதன் உபவேந்தருக்குக் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

புத்தளத்தில் கடல் நீர் ஏரி, தெங்குச் செய்கை, உப்பு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் அதிகமாக அமைந்துள்ளதால் குளியாபிட்டியில் இயங்கும் வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு வளாகமொன்றைப் புத்தளத்தில் அமைப்பது பற்றிய பிரேரணை கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாயிஸினால் இக்கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு புத்தளம், ஆனமடுவ ஆகிய இரு தேர்தல் தொகுதிகளுக்கும் அதிகமாக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அப்பாட நெறிகளைக் கொண்ட தேசிய கல்வியியற் கல்லூரியை அமைப்பதன் மூலம் அதில் பயிலும் பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு இவ்விரு தொகுதிகளிலுமுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் இக்கூட்டத்தின் போது கல்வி அமைச்சரால் கூட்டிக்காட்டப்பட்டதோடு நிதி ஒதுக்கீடுகளைச் செய்து அக்கல்லூரியை ஆரம்பிப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் அவசரமாக கட்டிட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அவரால் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவ்வாறான கட்டிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமானால் உடனடியாகவே அக்கல்லூரியை ஆரம்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி, உயர் கல்வி அமைச்சின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சரின் தலைமையில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆப்தீன் யஹ்யா, என்.டீ.எம். தாஹிர், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சரின் அபிவிருத்திக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com