Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
[10 - March - 2008] [Font Size - A - A - A]
தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும் பொருளாதாரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான `சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு;

விடுதலைப் புலிகள் சனிக்கிழமை கல்கே பகுதிக்கு அண்மையில் உள்ள கதிர்காமம்- புத்தல வீதியில் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உழவு இயந்திரத்தில் மூன்று இராணுவத்தினரும் மூன்று கொமோண்டோக்களும் பயணம் செய்த போது இத்தாக்குதல் இடம்பெற்றது.

கிளைமோர்த் தாக்குதலைத் தொடர்ந்து படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது 200 சுற்று ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உழவு இயந்திரத்தின் சக்கர பாதுகாப்புக் கவசத்தில் அமர்ந்திருந்த இராணுவ சார்ஜனே இத்தாக்குதலில் உயிரிழந்தவர் ஆவார்.

தற்போது அப்பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், ஆழமான தென்பகுதியினை சீர்குலைக்க முடியும் என்பதனை விடுதலைப் புலிகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி புத்தலப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 63 பேர் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் அப் பகுதியில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது அப்பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் அப் பகுதிக் கிராம மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் படையினர் தோல்வி கண்டுள்ளதையே இத்தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது.

முன்னைய தேடுதல்கள் தோல்வியில் முடிவடைந்து, அப்பகுதியில் படையினரின் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனைக் காட்டுகின்றது. இது அதிகம் செலவுகளை ஏற்படுத்தலாம். இதுவே விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம். வேறு பகுதிகளில் நடைபெறும் இதேபோன்ற தாக்குதல்களும் அதிக படையினரை உள்வாங்கலாம். இது படையினருக்கு மிகவும் சவாலான விடயம்.

ஆழமான தென்பகுதியை விட கொழும்பையும் தாக்கும் திட்டங்களை விடுதலைப் புலிகள் முதன்மைப்படுத்தி வருகின்றனர். எனினும், வன்னிக் களமுனை தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி படையினர் மடுவை நோக்கி தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். அது தற்போதும் தொடர்கின்றது. ஆனால், மடுவையும் விடத்தல்தீவையும் கைப்பற்றும் தமது இலக்குகளை படையினர் இன்றுவரை அடையவில்லை.

இரு வாரங்களில் மடுவைக் கைப்பற்றி விடுவதாக படையினர் கடந்த மாதங்களில் தெரிவித்திருந்தனர். எனினும், அவர்களின் காலக்கெடுக்கள் கடந்துவிட்டன.

இந்நிலையில், இந்த படை நடவடிக்கைகளை வழிநடத்தி வரும் இரு உயர் இராணுவ அதிகாரிகளான வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய மற்றும் 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ் ஆகியோர் கடந்த புதன்கிழமை கொழும்புக்குச் சென்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் இடம்பெற்று வரும் மோதல்களை விட முகமாலையிலும் படையினர் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அப்பகுதிகளில் நடைபெறும் படை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.

இதனிடையே கடந்த மாதம் 104 படையினர் கொல்லப்பட்டதாகவும் 822 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இக்காலப் பகுதியில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 201 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும், காணாமல்போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை எவ்வளவு?

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com