இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வடபகுதியில் இருந்து 300 பேர் சரணடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான தர்மசிறி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஆயுதபாணிகளின் கொலை அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் உள்ள 300 பொதுமக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளனர். யாழ்.குடாநாட்டில் உள்ள சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இரு வீடுகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களும், சிறுவர்களும் ஒரு வீட்டிலும் ஆண்கள் பிறிதொரு வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் சிறைச்சாலை அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், வெளிப்புறப் பாதுகாப்புக்கள் இராணுவம் மற்றும் பொஸிஸாரால் வழங்கப்பட்டு வருகின்றது.
அச்சம் காரணமாக யாழ்.குடாநாட்டில் இருந்து பொதுமக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்து வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.