இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்திய பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏலத்தில் விடப்பட்டிருக்கின்றன.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அலுவலகமாகப் பயன்படுத்தி வந்த கொழும்பு வார்ட் பிளேசிலுள்ள கட்டிடத்தில் வைத்தே இந்தப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டிருக்கின்றன.
இலங்கைக்கான நோர்வே தூதரகமே இந்த ஏலத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் வாங்க வந்தவர்கள் கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகத்துக்கு முன்பாக குழுமி நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து கண்காணிப்புக் குழுவினர் கடந்த ஜனவரி மாத நடுப் பகுதியுடன் இலங்கையை விட்டு வெளியேறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.