* ஜே.வி.பி. தலைவர் தெரிவிப்பு
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியாவை அல்ல என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் சோசலிச பெண்கள் ஒன்றியத்தின் சார்பில் கொழும்பில் சனிக்கிழமை சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய போர்வார்ட் பிளக் பிரதிநிதி சித்ரா கோஷ் சிறப்புப் பிரதிநிதியாக பங்கேற்றிருந்தார்.
நிகழ்வில் சோமவன்ச அமரசிங்க பேசுகையில்;
"நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த அரசாங்கம்தான் எம்மை இந்தியாவுக்கு எதிரான ஒரு கட்சியாக சித்திரிக்கிறது.
இந்தியாவில் உள்ள பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தினரையே நாங்கள் எதிர்க்கிறோமே தவிர இந்தியாவுக்கு எதிராக இல்லை.
மக்களை தவறாக வழி நடத்துகிற பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை நாம் வெறுத்து ஒதுக்கிறோம். இந்த நாட்டைப் பாதுகாக்க படையினர் மடிந்து கொண்டிருக்கும்போது, இந்த நாட்டினது அனைத்துத் தலைவர்களும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.