Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
[10 - March - 2008] [Font Size - A - A - A]
தோட்டத் தொழிற்துறையில் பணியாற்றுகின்றவர்களில் 56 வீதத்தினர் பெண்களாவர். எனினும் தொழிற்சங்க தலைமைத்துவத்தில் இவர்களுக்கு உரிய இடம்கொடுக்கப்படுவதில்லையென்று யுனிவெல்லோ நிறுவனத்தின் செயலாளர் நாயகம் எஸ்.முருகையா தெரிவித்தார்.

நாவலப்பிட்டி யுனிவெல்லோ நிறுவனத்தின் பெண்கள் பிரிவினால் நாவலப்பிட்டி நகரசபையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மகளிர் தின விழாவில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;

இன்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எமது நிறுவனத்தோடு இணைந்து செயற்படுகின்ற ஏனைய நிறுவனங்களோடு இணைந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல வன்முறைகளையும் நிறுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் மூலம் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும். சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் திகதியை தொழில் புரியும் சகல பெண்களுக்கும் சம்பளத்துடனான விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டும்.

பெருந்தோட்ட வறுமை ஒழிப்புத் திட்டத்தின்கீழ் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்மூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய 2006 - 2015 ஆண்டுக்கான பத்து வருட தேசிய வேலைத்திட்டத்தில் விசேடமாக மனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவம் முதலான மகளிர் பிரிவிற்கு அமுல் செய்வதற்கான நிதியை ஒதுக்கீடுசெய்ய அரசு முன்வரவேண்டும்.

பிரதேச மாகாண மற்றும் பாராளுமன்ற சபைகளிலும் கூட்டுறவு சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 35 வீதம் அதிகரிக்க சட்டத் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். வெளிநாடுகளில் தொழில்புரியும் பெண்களுக்கு சமூக பாதுகாப்பும் தொடர்பாடலும் அமுல் செய்யும் வகையில் சட்டம் அமுலாக்கல் செய்யப்படுவதுடன் சகல தேர்தல்களிலும் பங்கு பெறும் வகையில் தபால்மூலம் வாக்களிக்கும் உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு, மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிங்கள, தமிழ் மொழிப் பயிற்சியை கிராம மட்டத்திலிருந்து சகலருக்கும் வழங்கும் வகையில் மொழி அமுலாக்கல் செய்யப்படல் வேண்டும். தினந்தோறும் மக்கள் மத்தியில் பயத்தையும், கொடூர மனித கொலைகளையும் ஏற்படுத்தி வருகின்ற தற்போதைய சிவில் யுத்தத்தை நிறுத்த சகல தரப்பினரும் செயல்படுவதுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் விலை நிர்ணயம் செய்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார அபிவிருத்தியை நிவர்த்தி செய்யும் வகையில் சகல தரப்பினரும் கைத்தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு தேவையான பொருள்சார் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற தீர்மானங்களை முன்வைத்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com