Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
[10 - March - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க. கூறுகிறது

புகழ் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழு இலங்கையில் தனது நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள எடுத்த தீர்மானத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக் காட்டியிருக்கிறது.

அத்துடன், சர்வதேச குற்றச்சாட்டுகளை தவிர்த்துக் கொள்ளும் திரையாக மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.தே.க. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;"மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்க இணக்கத்துக்கு வந்திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை தொடர்பாக அரசாங்கமோ மனித உரிமைகள் பற்றி அமைச்சரோ எதிர்க் கட்சியுடன் அண்மைக் காலமாக எந்த பேச்சுகளையும் நடத்தியிருக்கவில்லை. அவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடன்படுவதாக எவருக்கும் அறிவிக்கவும் இல்லை.

புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழு இலங்கையிலிருந்து விலகிக் கொள்ள எடுத்த தீர்மானத்துடன், மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது.

இதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதென்பது, சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளிலிருந்து, தப்பித்துக் கொள்ள பாவிக்கும் ஒரு திரையாக மட்டுமே இருக்கும். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உண்மையான தேவைப்பாடு இருப்பின், அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சபையை நியமிப்பதையே ஜனாதிபதி முதலில் செய்ய வேண்டும். இதுவே எதிர்க்கட்சியிலுள்ள சகல அரசியல் கட்சிகளினதும் சிவில் சமுகத்தினதும் கோரிக்கையாகும்.

அரசியலமைப்பு சபையின் மூலமே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சபை நியமிக்கப்படாமையால் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ஏற்றுக் கொள்ள முடியாத, நம்பிக்கை வைக்க முடியாத அளவிற்கு கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் பலவீனடைவதற்கு இதுவும் முக்கிய காரணியாகும்.

இதேநேரம், சாட்சியாளர்களை பாதுகாக்கும் மற்றும் குற்றங்களுக்கு ஆளாலான நபர்கள் தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற ஆலோசனை குழுவுக்கு கூட இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த சட்டத்தை கூட நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையென்பது இதிலிருந்து தெளிவாகிறது.

அத்துடன், அடுத்த பாராளுமன்ற அமர்விலும் இது பற்றிய விடயதானங்கள் எதுவுமில்லை. எனவே, மனித உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கத்திடம் பொறுப்பானதும் ஆழமானதுமான வேலைத் திட்டங்கள் எதுவுமில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com