|
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள அழகுபடுத்தும் நிலையமொன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.15 மணியளவிலேயே பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவரான குறிப்பிட்ட அழகுபடுத்தும் நிலையத்தின் பெண் உரிமையாளர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை முன்னிட்டு பெருமளவான பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள பகுதியில் வைத்தே அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். |