ஆலையடிவேம்பு சின்னப்பனங்காடு பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு 8.20 மணியளவில் கடும் மழை பெய்துகொண்டிருந்த போது இவரது வீட்டுக்கு வந்த ஆயுதபாணிகள் இவரை வீட்டிற்கு வெளியே கூட்டிச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் கொழும்பு வரவிருந்த நிலையிலேயே முதல் நாளிரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தலையில் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது சடலம் வீட்டிலிருந்து சுமார் 50 யார் தூரத்தில் சாகமம் வீதியில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் குமார் (22 வயது) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.