Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
[10 - March - 2008] [Font Size - A - A - A]
விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கி உதவி புரிந்ததாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்;

நிதி நிறுவனங்கள், மின் மாற்றிகள் போன்றவற்றின் மீது தாக்குதல்களை நடாத்த புலிகள் தீட்டியுள்ள திட்டங்கள் தொடர்பான விபரங்கள் கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கைது செய்யப்பட்ட இரு விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒருவர் மட்டக்குளியை வதிவிடமாகக் கொண்டவர். மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் இவர் கையடக்கத் தொலைபேசி மூலம் அவசியமான தகவல்களைத் தெரிவித்து வந்துள்ளார்.

புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜெயரட்ண இவர்களை கைது செய்ததையடுத்தே ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இவர்கள் வழங்கும் தகவல்களே பெரும் உறுதுணையாக இருந்துள்ளன. இவர்கள் மிக மிக முக்கியமான பிரமுகர்களுடன் தொடர்புடையவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்கள் மூலமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

இவர்களின் திரைப்படத் தயாரிப்பாளரான ஒருவர் இரு விடுதலைப் புலிகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து அவர்களது செயற்பாடுகளுக்கு உதவியுள்ளார்.

இந்த இரு புலிச் சந்தேக நபர்களும் முக்கியமான அரச கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை இரகசியமாக திரட்டி வந்துள்ளனர்.

மேலும் ஒரு விடுதலைப்புலி பெண் உறுப்பினர் வெவ்வேறு இடங்களில் அதி முக்கிய நபர்களின் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகி குறித்த நபர்களின் விபரங்களை பெற்று வந்துள்ளார்.

மேலும் ஒரு பெண் புலி உறுப்பினர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் ஒருவரிடம் 1998 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிக் கொண்டே முன்னாள் இராணுவ அதிகாரிகள் மூலமாக அதிமுக்கியமான நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று வழங்கி வந்துள்ளார்.

அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல, டக்ளஸ் தேவானந்தா, றஞ்சித் சியாம்பலப்பிட்டிய ஆகிய மூன்று அமைச்சர்களைக் கொல்வதற்கும் எரிபொருட்களை கொண்டுசெல்லும் புகையிரதம், புறக்கோட்டை உலக வர்த்தக மையம், களனி - விக்ரோறியா மேம்பாலம் ஆகியவற்றின் மீதும் நாட்டிலுள்ள பல்வேறு மின் மாற்றிகளை தகர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் 1990 களில் இராணுவத்தில் பணியாற்றியவருமான இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவர் மேற்குறித்த அமைச்சர்களில் ஒருவர் தொடர்பான தகவல்களை வழங்கி வந்துள்ளார். மற்றைய இராணுவ அதிகாரியும் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

Email this page Your Opinion Print this page
மட்டு. மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று தேர்தல்
வவுனியாவில் கொள்ளையர் பெரும் அட்டகாசம் தப்பிச் செல்கையில் வீசிய குண்டால் இருவர் காயம்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு புகழ்பெற்ற மருத்துவர்கள் முடிவு
ஆலையடிவேம்பை அடிக்கடி சுற்றிவளைத்து மக்களை வீடியோ படமெடுக்கும் படையினர்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்னியில் நடேசனுடன் சந்திப்பு
தற்கொலை தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கியதாக இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் சுட்டுக்கொலை
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
அழகுபடுத்தும் நிலைய உரிமையாளர் கடத்தல்
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க கூட்டுத்தாபனம் திட்டம்
மனித உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் சுயரூபம் சர்வதேச சுயாதீனக்குழுவின் வெளியேற்றத்தால் அம்பலம்
தொழிற்சங்க தலைமைத்துவங்களால் தோட்டப்புற பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
பொலநறுவ மாவட்டத்தில் தமிழ் பேசும் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மன்னாரில் முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு சினைப்பர் தாக்குதலில் 8 படையினர் பலி
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாம் வெறுக்கிறோம்
இனவாத அரசிற்கெதிராக இலங்கைத் தமிழர் சகல வழிகளிலும் போராடவேண்டியநேரம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை
கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட செய்தி இணையத்தள புகைப்படப்பிடிப்பாளர் விடுதலை
நீர்கொழும்பு சந்தையில் திடீர் சோதனை பதிவு செய்யாத தராசுப்படிகளுடன் 35 பேர் கைது
கண்காணிப்பு குழுவின் பொருட்கள் ஏலம்
ஐ.தே.க.வின் ஆட்சிக் காலத்தில் நடந்த தவறால் இன்று பாரிய போராட்டத்திற்கு முகம் கொடுக்கிறோம்
யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் 300 பொதுமக்கள் சரணடைந்தனர்
`படையினரின் வளங்களை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி'
புத்தளம், ஆனமடுவவில் கல்வி அபிவிருத்தியை துரிதப்படுத்த சுசில் பிரேம ஜயந்த பணிப்புரை
மஸ்கெலியாவில் 40 இலட்சம் ரூபா செலவில் பொது சுகாதார வைத்திய பணிமனை
`ஐ.தே.க.அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கு தனிப்பெரும் அமைச்சை உருவாக்கும்'
தலைவரின் தலைமையில் அனைவரும் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே எமக்குள்ள ஒரே வழி
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக உடனடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் மரணம்
தவறான தகவலால் முக்கிய பிரமுகருக்காக அரசு வெளியிடவிருந்த இரங்கல் அறிக்கை
கண்டியில் பாதுகாப்பு முன்னேற்பாடு அதிகரிப்பு விண்ணப்ப படிவங்களால் பொதுமக்கள் சிரமம்
இரு வள்ளங்கள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மட்டு.நகரில் பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
`பயங்கரவாதிகள் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு எதையும் செய்யக் கூடிய நிலையில் சிங்களவரும் உள்ளனர்'
கண்டியில் திடீர் தேடுதல் 13 பேர் கைது
தாமரையிலை பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்
புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வீடு, வாகனம் தாக்கப்பட்டமைக்கு கண்டனத் தீர்மானம்
மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com