Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sinhala news
முல்லைத்தீவை கைப்பற்றும் இறுதி இராணுவ நடவடிக்கை
[10 - March - 2008] [Font Size - A - A - A]
வன்னி இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையணிகள் எதிர்பார்த்த இலக்குகளாகக் கருதப்பட்ட பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரிடமிருந்து வெற்றிகரமாகக் கைப்பற்றிவிட்டனர். வன்னியில் வெலிஓயப் பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் படையினர் இதுவரை 230 புலிகள் இயக்கத்தினரைக் கொன்றுள்ளதுடன், அப் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பலம்வாய்ந்த பல பாதுகாப்பு அரண்களைக் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக புலிகளின் பலமான கட்டுப்பாட்டிலிருந்த ஜனகபுர, கிறிப்பன்ஆறு பிரதேசங்களில் புலிகளின் பிரதான பாதுகாப்பு அரண்கள், பதுங்கு குழித் தொடர்கள் தற்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

இதனால், புலிகள் இயக்கத்தினர் பின்வாங்கிச் சென்று முல்லைத்தீவை நோக்கிய பகுதிகளில் புதிய பதுங்கு குழிகள், அரண்களை அமைக்கத் தொடங்கியுள்ளனர். படையினரைத் தொடர்ந்தும் அந்த பிரதேசங்கள் வழியாக முன்னேறுவதைத் தடுப்பதே புலிகளின் நோக்கமாகும். ஏனெனில், அந்த பிரதேசங்களில் படையினர் முன்னேறுவதைத் தடுத்தாலன்றிப் படையினர் முல்லைத்தீவை நோக்கிச் செல்வதைத் தடுப்பது புலிகளால் முடியாது என்றே கருதப்படுகிறது.

எவ்வாறாயினும் ஏற்கனவே,, ஜனகபுர , கிறிப்பன்ஆறு பிரதேசங்களிலுள்ள புலிகளின் அரண்கள் , பதுங்கு குழிகளைப் படையினர் கைப்பற்றிவிட்டதால் தொடர்ந்தும் புலிகள் அமைக்கும் புதிய அரண்களைத் தகர்த்து முல்லைத்தீவை நோக்கிச் செல்வது படையினருக்கு இலகுவாகவே இருக்கும் எனவும் இந்தவகையில் படையினர் வெகுவிரைவில் முல்லைத்தீவைக் கைப்பற்றும் இறுதி இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் எனவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமின 3.3.2008

Email this page Your Opinion Print this page
எரித்திரியா இராணுவக் குழுவால் புலிகளுக்கு தாக்கியழிப்பு ஆயுதங்கள் விநியோகம்
முல்லைத்தீவை கைப்பற்றும் இறுதி இராணுவ நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com