இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் 478 ஓட்டங்களையும், இங்கிலாந்து 340 ஓட்டங்களையும் குவித்தன.
பின்னர் நியூஸிலாந்து தனது இரண்டாவது இனிங்ஸில் 177 ஓட்டங்களுக்கு 9 விக்கெட் எனும் நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து, 2 ஆவது இனிங்ஸில் இங்கிலாந்து அணி 300 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிபெறலாமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இங்கிலாந்து அணி 110 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் இயன்பெல் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூஸிலாந்து பந்து வீச்சாளர் கைலே மில்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நியூஸிலாந்து அணி 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்து பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.