ரஷ்யாவின் ஜனாதிபதியாக டிமித்ரி மிட்விடேவ் எதிர்வரும் மே மாதம் ஏழாம் திகதி அதிகாரபூர்வமாக பதவியேற்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் டிமித்ரி மிட்விடேவ் 70.28 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் டிமித்ரி மிட்விடேவின் வெற்றியை கடந்த சனிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தன்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு மிட்விடேவ் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புட்டினின் தீவிர ஆதரவாளரான அவர் புட்டின் அரசு கடைப்பிடித்த பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென உறுதி அளித்துள்ளார்.
மே மாதம் ஏழாம் திகதி மிட்விடேவ் அதிகார பூர்வமாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு ஆண்டுகள் பதவியில் நீடிப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.