அமெரிக்காவில் சீக்கிய மாணவனின் தலை முடியை வெட்டிய பாகிஸ்தான் மாணவனுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ் மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 15 வயதுடைய சீக்கிய மாணவன் ஹர்பலின் தலை முடியையே சக பாகிஸ்தான் மாணவன் உமர் அஹமத் வெட்டியுள்ளான்.
கடந்த வருடம் மே மாதம் ஹர்பலை மிரட்டி அவனது நீண்ட தலைமுடியை கத்தரியால் வெட்டிய அஹமத் உன் தலைமுடி நீளமாக இருப்பது என் மதத்திற்கு எதிராகவுள்ளதெனத் தெரிவித்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் ஹர்பலின் பெற்றோர் பொலிஸில் புகார் செய்ததைத் தொடர்ந்து அஹமத் கைது செய்யப்பட்டான்.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அஹமத்துக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், மத அடிப்படையில் வெறுப்பைத் தூண்டியது சட்டப்படி குற்றம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.